நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்

375
  1. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 99 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 99 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு மேலும் 46 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 14 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.