மழைக்கால சளியை விரட்ட சிறந்த வழி

276
Advertisement

வெயிலும் மழையும் மாறி மாறி வர ஆரம்பித்துள்ள சூழலில் பலருக்கும் உடல் நலக்குறைவு உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

தட்ப வெட்ப சூழ்நிலையில் நிகழும் மாற்றத்தை உடலால் உடனடியாக ஏற்று கொள்ள முடியாததே இதற்கு காரணம்.

மழையில் நனைந்த பிறகு தீடிரென சளி பிடித்து கொண்டு, மூக்கடைத்து கொள்ளும் போது, அப்படியே விட்டு விட்டால் அதிகமாகி நீண்ட நாட்கள் சமாளிக்க வேண்டிய பிரச்சினையாக மாறிவிடும்.

மழைக்காலத்தில் சளி மற்றும் மூக்கடைப்பு ஏற்பட்டால் பின்வரும் ஆயுர்வேத கஷாயத்தை தயாரித்து பருகுவது நல்ல பலன் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 டம்ளர் தண்ணீரில் புதினா இலைகள், ஓமம், வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வரை மிதமான தீயில் காய்ச்சி குடிப்பதற்கு, ஆவி பிடிப்பதற்கு மற்றும் வாய் கொப்பளிக்க என பயன்படுத்தி வந்தால் விரைவில் சளி சரியாகி விடும். 

வெறும் வயிற்றிலோ அல்லது சாப்பிட்ட பிறகோ கஷாயத்தை குடிக்க சொல்லும் மருத்துவர்கள், அதிக சளி இருந்தால் ஒரு நாளில் மூன்று முறை இதே தண்ணீரால் வாய் கொப்பளித்தல் நல்ல பலன்களை தரும் என எடுத்துரைக்கின்றனர்.