கேரளா – தமிழக எல்லையில் கோழிக்கழிவுகளை கொட்டிச் சென்ற கும்பலிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

29
Advertisement

கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகளை கொண்டு வந்து, கோவை வாளையார் எல்லையில் மர்ம கும்பல் கொட்டியுள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், அந்த வாகனத்தை மடக்கி பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கொட்டப்பட்ட கழிவுகளை அதே வாகனத்தில் அள்ளிச்செல்லும்படியும் வலியுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கோழிக்கழிவுகளை கொட்டப்பட்ட சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.