மாத்திரை என்று நினைத்து ஹெட்போனை விழுங்கிய பெண்

199
Advertisement

வலி நிவாரணி மாத்திரை என்று நினைத்து வயர்லெஸ் ஹெட்போனை விழுங்கியுள்ளார் ஒரு பெண்மணி.

அமெரிக்காவிலுள்ள மஸாசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் கார்லி. அவர் உடல்நலக் குறைவு காரணமாக கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துள்ளார். ஒரு கையில் வயர்லஸ் ஹெட்போனும், இன்னொரு கையில் வலி நிவாரண மாத்திரையும் வைத்திருந்திருக்கிறார்.

அப்போது அவருக்கு உடல்வலி ஏற்படவே, அதற்கான மாத்திரை என்று நினைத்து ஒயர்லஸ் ஹெட்போனை விழுங்கியுள்ளார். ஆனால், வலி குறையாமல் போகவே சிறிது சந்தேகம் அடைந்துள்ளார். உடனே, தனது கையிலிருந்த ஹெட்போனைக் காணவில்லையே என்று நினைத்துத் தேடத் தொடங்கினார்.

தனது வலப்புறமாக ஹெட்போன் இருப்பதாக அது காட்டியது. அதனால் மியூசிக்கை ஒலிக்கச் செய்துள்ளார். அந்த மியூசிக் சத்தம் அவரது வயிற்றிலிருந்து கேட்கத் தொடங்கியுள்ளது. அப்போதுதான், தன்னுடைய கவனக்குறைவால் மாத்திரைக்குப் பதில் ஹெட்போனை விழுங்கிவிட்டதை உணர்ந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து மருத்துவனைக்கு விரைந்திருக்கிறார். அவருடைய உடம்பு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் ஹெட்போன் வயிற்றில் இருந்துள்ளதைக் காண்பித்தது. என்றாலும், ஹெட்போன் எந்த உடலுறுப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

அந்த ஹெட்போனை எப்படி வெளியே எப்படி எடுப்பது என்று தெரியாமல் தவித்த கார்லி, அறுவைச் சிகிச்சை செய்துதான் எடுக்க வேண்டுமோ என்று அச்சப்பட்டிருக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அடுத்த நாளே இயற்கையான முறையில் ஹெட்போன் உடம்பைவிட்டு வெளியே வந்துவிட்டது.