தெற்கு கென்யாவில், கலானா (Galana) ஆற்றிற்கு அருகே ட்ரக் ஒட்டி சென்ற நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
மழைநீரால் அதிக ஆரவாரத்தோடு காணப்பட்ட ஆற்றின் சீற்றத்தை சமாளிக்க முடியாமல் அவரின் ட்ரக் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. அலைகளின் அழுத்தம் அதிகமாக இருந்ததால், அக்கம் பக்கம் இருந்த மக்களும் உதவி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், யானைகளை பராமரிக்கும் ஷீல்ட்ரிக் அறக்கட்டளைக்கு இந்த தகவல் சென்றுள்ளது. அவர்களின் விமானப் பிரிவை சேர்ந்த டாரு கார் ஹார்ட்லீ மற்றும் ரோன் கார் ஹார்ட்லீ ஆகிய விமானிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆபத்தான மீட்புப் பணியை மேற்கொண்டு, ஆற்றில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
ஆற்றின் அழுத்தம், கவிழ்ந்த ட்ரக்கில் உள்ள பெட்ரோல் போன்ற சவாலான சூழலை சிறப்பாக கையாண்ட விமானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதோடு, ட்ரக் டிரைவர் ஒருவர் ஆறு மணி நேரத்திற்கும் மேல் தனியாக போராடி மீட்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.