ஒடிசாவில் தொடங்கிய வேகத்தில் மீண்டும் தடம்புரண்ட ரயில் ..

191
Advertisement

ஒடிசாவில் 275 பேரை பலி கொண்ட கோர விபத்து நிகழ்ந்த பாலசோர் வழித்தடத்தில் 60 மணிநேரத்துக்குப் பின் குறைந்த வேகத்தில் இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.

ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நேற்று இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டமாக ரயில்கள் இயக்கப்பட்டன. அப்போது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரு கரம் கூப்பி வணங்கி, ரயில் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.