பெண்ணிடமிருந்து பீஸாவைத் திருடிச்சென்ற கடல்பறவை

301
Advertisement

https://www.instagram.com/reel/CdzsGGYlgmk/?utm_source=ig_web_copy_link

பெண்ணிடமிருந்து பீஸாவைக் கடல்பறவைத் திருடிச்சென்ற சம்பவம்
இணையதளவாசிகளைக் கவர்ந்துவருகிறது.

மதிய உணவைத் தனது வீட்டுத் தோட்டத்தில் வைத்து சாப்பிட விரும்பினார்
ஒரு பெண். இதற்காக ஆர்டர்செய்த பீஸாவைத் தனது தோட்டத்திற்கு கொண்டு
சென்றார். அப்போது வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்துவரச்சென்றாள்.

திரும்ப தோட்டத்துக்குள் வந்து பார்த்தபோது பீஸா வைத்திருந்த அட்டைப்பெட்டி
காலியாக இருந்தது. இதனால் அதிர்ந்து போனார் அந்தப் பெண்மணி. எதேச்சையாக
அவர் வானத்தைப் பார்த்தபோது கடல் பறவை ஒன்று பீஸாவுடன் பறப்பதைக் கண்டார்.
இதனால், பசியை மறந்து பூரிப்படைந்தார். பறவைக்கு இரை வழங்கிய மகிழ்ச்சியில்
திளைத்தார்.

அந்தப் பெண்ணின் பசியை மறக்கச்செய்து பூரிப்பில் ஆழ்த்திய அந்தக் கடல்பறவையின்
வீடியோ வலைத்தளவாசிகளையும் பூரிப்பில் ஆழ்த்தியுள்ளது.