மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது

222

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறித்த நாணயங்களை ராயல் மிண்ட் வெளியிட்டுள்ளது. ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலதுபாக்கம் பார்ப்பது போலவும், பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம் எதிர்திசையில் இடது பக்கமும் உள்ளது. மன்னர் 3ம் சார்லஸ் மற்றும் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இருவரது நாணயங்களும் பிரிட்டனில் ஒன்றாக புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் இருந்து மன்னர் 3ம் சார்லசின் நாணயங்களை மக்கள் பார்க்கத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுளள்து.