ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி

242
Advertisement

ஒட்டகத்துக்கு லிப்ஸ் கிஸ் கொடுத்த நாய்க் குட்டி பற்றிய தகவல்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே இன விலங்குகள் அன்பு பாராட்டி முத்தமிட்டுக்கொள்வதை
நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒட்டகமும் நாய்க் குட்டியும்
தங்களுக்குள் அன்யோன்யமாக அன்பைப் பரிமாறிக்கொண்டுள்ளது
நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.

ஒட்டகம் ஒன்று திறந்த வெளியில் நின்றிருக்க, அங்கு வந்த
நாய்க் குட்டி ஒன்று வாலாட்டிக்கொண்டே குரைக்கத் தொடங்குகிறது.
சிறிது சிறிதாக ஒட்டகம் அருகே செல்கிறது.

நாய்க் குட்டியின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஒட்டகம்
மெதுவாகக் குனிந்து குனிந்து உதட்டில் முத்தமிடுகிறது. சிறிது நேரம்
அவையிரண்டும் முத்தமிட்டுக் கொள்கின்றன. தன் ஆசையை
நிறைவேற்றிய ஒட்டகத்தைப் பார்த்து வாலாட்டிக்கொண்டே நிற்கிறது
நாய்க் குட்டி.

அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்-..?