பீகாரில் கலை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

74
Advertisement

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார்.

இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில், பாடகி நிஷா கலந்து கொண்டு பாடினார். அவர் மேடையில் பாடிக்கொண்டிருந்த போது, திடீரென துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டது. இதில், பாடகி நிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.