போராட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

225

ஈரானில் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 வாரங்களை கடந்தும் நீடிக்கும் போராட்டங்களில் வன்முறை வெடித்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, ஹிஜாப் முறையாக அணியவில்லை என போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை கண்டித்து, ஈரான் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கண்டன கோஷங்களை எழுப்பி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களில் வெடித்த வன்முறைகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 92 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், ஹோட்டலில் ஹிஜாப் அணியாமல் உணவு சாப்பிட்ட பெண்ணை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.