இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

221

தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம், சென்னை புறநகர்ப் பகுதியான பள்ளிக்கரணை, காஞ்சிபுரம் மாவட்டம் கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகிய பகுதிகள் சர்வதேச சதுப்பு நிலங்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவற்றை ராம்சார் பட்டியலில் உள்ள சதுப்பு நிலங்கள் என்று அங்கீகரிக்கப்படும்.ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் நகரில் உலகின் சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின்படி முக்கிய சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டால் அவை ராம்சார் பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப் புநிலம் ஆகிய இரண்டு பகுதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ராம்சார் அங்கீகார பட்டியலில் இடம் பெற்றுள்ள பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது