உணவு கொண்டுசென்ற ட்ரோனைத் தாக்கத் தொடங்கிய பறவை பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து விங் என்னும் ட்ரோன் நிறுவனம் ஒன்று ஆஸ்திரேலியா, கான்பெரா நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவு, காபி, மருந்து, ஹார்டுவேர் பொருட்களை வழங்கி வருகிறது.
அந்த நிறுவனத்திடம் ஆஸ்திரேலியாவில் உள்ள வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானங்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். இந்தக் குளிர்பானம் அவருக்கு ட்ரோன்மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
நடுவானில் ட்ரோனைக்கண்ட காகம் போன்ற பெரிய பறவை ஒன்று ட்ரோனை ஆவேசமாகக் கொத்தத் தொடங்கியது.
பறவையின் தாக்குதலை சமாளித்துக் குளிர்பானங்களை டெலிவரி செய்துவிட்டு ட்ரோன் விரைவாகப் பறந்துசென்றுவிட்டது. இருப்பினும் பறவைக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று உள்ளூர் பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியப் பெருநகரங்களில் மட்டுமே இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ட்ரோன் சேவைக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான டெலிவரி செய்தது.
தற்போது சிறிய பகுதிகளில் ட்ரோன்மூலம் பொருட்கள் சப்ளை செய்வதை விங் நிறுவனம் தற்காலிகமாகத் தடைசெய்துள்ளதாக அறிவித்துள்ளது.