கேமராமேனாக மாறிய பறவை

266
Advertisement

கேமராமேனாக மாறி செயல்பட்ட பறவையின் வீடியோ ஆன்லைனில் வைரலாகிவருகிறது.

நியூசிலாந்து நாட்டின் ஃபியர்லேண்ட் பகுதிக்குச்சென்ற பலருக்கு கீ பறவையைப் பற்றி நன்கு தெரியும். அந்நாட்டின் பூர்வீகப் பறவையான அது ஒருவிதக் கிளி. நுண்ணறிவுமிக்க கிளியான கீ குறும்புத்தனமாகவும் செயல்படும். அதேசமயம் எப்போதும் துறுதுறுவென சுற்றிவந்துகொண்டே இருக்கும். இந்தப் பறவையின் குறும்புத்தனத்தை ரசிப்பதற்காக அப்பகுதிக்கு ஏராளமானபேர் சுற்றுலா செல்வர்.

இந்தப் பறவை, கவனக்குறைவான சுற்றுலாப் பயணிகள், பார்வையாளர்களிடமிருந்து பணப்பை, நகை, பேக், உணவுப் பை போன்றவற்றைப் பறித்துக்கொண்டு சென்றுவிடும்.

அதனால், அந்தப் பறவையின் அறிவுத்திறனை சோதிக்க விரும்பிய ஒருவர், கேமரா ஒன்றை பூங்காவில் வைத்தார். அதனைப் பார்த்த கீ தனது இயல்பான குணத்தைக் காண்பித்தது. அந்தக் கேமராவைத் தூக்கிக்கொண்டு பறந்துசென்றது.

கேமராவைக் களவாடிக்கொண்டு சென்ற கீயைப் படம்பிடித்தபடி இன்னொரு டிஜிட்டல் கேமராவுடன் சென்றார் அந்த நபர். கீயும் வான்வழியாகப் பறந்துசென்று முடிவில் ஒரு பாறைமீது போட்டுச்சென்றது.

முடிவில் கீ களவாடிய கேமராவில் பதிவான காட்சிகளை ரசித்து மகிழ்ந்துள்ளார் அந்த நபர்.

அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது கீயின் செயல்.