பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து, உரிய  நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய விவசாயிகள் சங்கத்தினர், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்…

138
Advertisement

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பா.ஜ.க MP-யுமான பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சட்டு தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கங்கள், மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாரதிய விவசாயிகள் சங்கத்தினர், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) எதிர்ப்பு தெரிவித்த இந்திய மல்யுத்த வீரர்களை டெல்லி போலீசார் வார இறுதியில் நடத்திய விதத்தை கண்டித்துள்ளது, இது “மிகவும் கவலை அளிக்கிறது” என்று கடுமையாக வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளது.