கில்லி விளையாடும் அரேபியர்கள்

287
Advertisement

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான கில்லியை
அரேபியர்கள் சௌதி அரேபியாவில் விளையாடும் வீடியோ ஒன்று
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

குமரி மாவட்டத்தில் புள்ளுக்கிட்டி, சிங்காம்புள், நெல்லை மாவட்டத்தில்
சில்லாங்குச்சி, கோவையில் கில்லி தண்டு, நீலகிரியில் சிலதா, திருச்சியில்
கிட்டிப்புள் போன்ற பெயர்களால் விளையாடப்படும் கில்லி விளையாட்டை
அரேபியர்களும் விளையாடி வருகின்றனர்.

கில்லி விளையாட்டு கிட்டத்தட்ட கிரிக்கெட் விளையாட்டு போன்றதுதான்.
இரண்டு அணியாக சேர்ந்து விளையாடும் இந்த விளையாட்டு குழு மனப்
பான்மையையும், சகோதரத்துவத்தையும் வளர்ப்பதோடு, ஒரு சிறந்த உடற்
பயிற்சியாகும்.

பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் இந்த கில்லி விளையாட்டு உடல்
திறனை வளர்ப்பதோடு, ஞாபகத்திறன், கணிதத் திறன், அறிவாற்றலையும்
வளர்க்கும்.

கில்லி விளையாட நேரமோ வயதோ தடையில்லை. இருவர் இருந்தாலும்
விளையாடலாம். இரட்டைப் படை எண்ணில் நபர்கள் இருந்தால், சரிசம
மானக் குழுவாகப் பிரிந்து விளையாடுவர்.

விளையாட்டுப் பொருட்கள் வாங்கவும் தேவையில்லை. அந்த வகையில்
செலவில்லா, உடல் ஆரோக்கியம் தரும் அருமையான விளையாட்டு கில்லி.