தேர்தல் எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது….

147
Advertisement

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கடந்த மார்ச் 28ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு அனைத்து தரப்பினரின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன.

மூன்றாவது நாள் விசாரணையின்போது, பொதுச் செயலாளர் பதவிக்கு மாற்றாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாமல், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரையும் கட்சியில் இருந்து நீக்கியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. பொது செயலாளர் நடவடிக்கைகள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்ற விதி உள்ளதாகவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலங்களிலும் இதே விதிதான் பின்பற்றப்பட்டது என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட இதே வாதங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும் அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வாதங்கள் நிறைவடைய வாய்ப்பில்லாததால், வழக்கை ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.