திருவாரூரில் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  சோதனை நடத்தினர்.!

24
Advertisement

திருவாரூரில் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக இருக்கும் முத்துமீனாட்சி,

விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியபோது, கடந்த 2019 ஆம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முத்துமீனாட்சி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், திருவாரூரில் ஜி.ஆர். டி கார்டன் பகுதியில் உள்ள முத்துமீனாட்சி வீடு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, கிராம உதவியாளர் கார்த்தி வீடு ஆகிய  இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.