‘லியோ’ டைட்டிலால் கிளம்பிய புது சர்ச்சை! வேறு பெயர் மாற்றப்படுமா?

59
Advertisement

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜயின் தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாகி பெரும்பான்மை வரவேற்புகளை பெற்றாலும், சில விமர்சனங்களையும் சேர்த்தே பெற்றுள்ளது.

டைட்டிலுடன் சேர்த்து ப்ரோமோ வீடியோவும் ரிலீஸ் செய்யப்பட்டது.

விஜயின் கதாபாத்திரத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இரு பரிமாணங்கள் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் சாக்லேட் தயாரிக்கும் அதே  நபர் கத்தியை தீட்டி, தீவிரமான போக்கில் கதை செல்லபோவதை வெளிப்படுத்துகிறார்.

Advertisement

இந்நிலையில், இப்படியும் ஒரு சிக்கல் வர வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் மேற்கோள் காட்டி வருகின்றனர்.

1910ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் பிரபல coffee நிறுவனமான லியோவின் பெயரை, முறையான அனுமதி பெறாமல் வைக்கும் பட்சத்தில் copyright உள்ளிட்ட பிரச்சினை வருமா போன்ற கேள்விகள் சமூகவலைதளங்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.