தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் நாளை வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
மேலும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் உள்ளது. இது மேலும் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து, 21-ம் தேதி புயலாக வலுப்பெற்று வங்கதேசம் – மியன்மார் இடையே கரையை கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.