அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த அரசு தடை

23

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் புதிதாக பணியில் சேர்ந்த மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைக்க கூடாது என்று தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மருத்துவக் கல்விச் சேவைகள் விதிகளில் திருத்தங்களைச் செய்து, மருத்துவர்களின் கிளினிக் பயிற்சிக்கு முழுத் தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதற்கு தெலுங்கானா ஜூனியர் டாக்டர் அசோசியேஷன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.