தொண்டையில் சிக்கிய மூடி- கடவுளாய் மாறிய ஆசிரியை !

311
Advertisement

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ நால்வரில், முதல் மூன்று பிரிவினரும் ஜீவன்களாவர். நான்காவதாக இருக்கும் இறைவன், எல்லாரிலும் உயர்ந்தவராவார். இது  ஏறுமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, இறங்குமுகமாக அல்ல.

தாயின் பணி தந்தையைச் சுட்டிக்காட்டுதல், தந்தையின் பணி குருவைச் சுட்டிக்காட்டுதல்,குருவின் பணி தெய்வத்தைச் சுட்டிக்காட்டுதல் என்ற பொருளிலும் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இதனை நிரூபிக்கும் சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது. குட் நியூஸ் இயக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ள பதிவில்,

பள்ளியில் சிறுவன் ஒருவன் , தண்ணீர் குடிக்க பாட்டிலை வாயில் வைத்து திறக்க முயற்சிக்கிறான் ஒருகட்டத்தில்  தண்ணீர் வரவில்லை என பாட்டலின் மூடி பகுதியை பல்லில் வைத்து கடித்தபடி பின்புறத்தை அழுத்த ,மூடி சிறுவனின் தொடையில் சிக்கிவிடுகிறது.

சில நொடிகளில் துடித்துபோன சிறுவன் அங்கும் இங்கும் ஓட , பின் தன் வகுப்பில் இருந்த ஆசிரியையிடம் சென்று ,மூடி தன் தொண்டையில் சிக்கியதை அவரிடம் புரிய வைக்க.

பதறி போன அந்த ஆசிரியை சுதாரித்துக்கொண்டு, புத்திசாலித்தனமாக சட்டென அந்த சிறுவனுக்கு முதலுதவி  கொடுக்கிறார்.சிறுவனை பின்புறமாக வயிற்று பகுதியை நன்றாக அழுத்தியதில், சிறுவன் முயற்சிக்க தொண்டையில்  சிக்கிய மூடி வெளியே வந்தது.

பின்பு தான் , இருவரும் நிம்மதி அடைந்தனர்.சிறிது நேரத்தில் பயந்துபோன  சிறுவனின் கண்ணீரை துடைத்துவிடுகிறார்.சரியான நேரத்தில் , தைரியமாக முடிவெடுத்து  சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆசிரியைக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.சரியான நேரத்தில் கடவுளாக மாறி குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆசிரியைக்கு பாராட்டுகள் குவிகிறது. மேலும் அவரை ஹீரோவாக சித்தரித்து கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர் இணையவாசிகள்.