உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, முகநூலில் 37.82 சதவிகிதமும், இன்ஸ்டாகிராமில் 86 சதவிகிதமும், வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
மே 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முகநூல் தளத்தில் ஏப்ரல் மாதத்தில் 53 ஆயிரத்து 200 வெறுப்புப் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
இது மார்ச் மாதத்தில் பதிவான 38 ஆயிரத்து 600 பதிவுகளை ஒப்பிடும்போது 37.82 சதவீதம் அதிகமாகும்.
இன்ஸ்டாகிராம் தளத்தில் மார்ச் மாதத்தில் 41 ஆயிரத்து 300ஆக இருந்த வெறுப்புப் பதிவுகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 77 ஆயிரம் பதிவுகளாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.