தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, வரும் 31 ஆம்தேதி மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் விஜயகுமார், சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விசாரணையில், உள் ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையகூட்டத்தை நடத்தலாம் என்று உத்தரவிட்டனர்.
ஆனால், உள் ஒதுக்கீடு குறித்து எந்தமுடிவும் எடுக்கக்கூடாது என இடைக்காலத்தடை விதித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய – மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்கள் இந்த மனு குறித்து பதில் அளிக்கவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.