பேசும் கிறிஸ்துமஸ் மரம்

324
Advertisement

பேசும் கிறிஸ்துமஸ் மரத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. மக்கள் தங்கள் வீடுகளை விதம்விதமாக அலங்கரித்து கிறிஸ்துமஸ்ஸை வரவேற்பது வழக்கம்.

அந்த வகையில் ஷாப்பிங் மால்களும் கிறிஸ்துமஸ் மரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக அலங்கரிக்கப்பட்டுள்ள பேசும் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று சிறுவர்கள்முதல் பெரியவர்கள்வரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பேசும் கிறிஸ்துமஸ் மரத்தின் வீடியோ ட்டுட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

56 அடி உயரமுள்ள அந்த மரம் கனடாவில் புகழ்பெற்ற வணிக வளாகம் ஒன்றில் உள்ளது. வெகுதொலைவிலிருந்து வரும்போதே மக்களை ஈர்த்துவிடுகிறது இந்தக் கிறிஸ்துமஸ் மரம்.

கோமாளி முகத்துடன் உள்ள அந்த மரம் ஷாப்பிங் மாலுக்குள் வரும் மனிதர்களுடன் பேசுகிறது. அதைக் கேட்டு அளவிலா மகிழ்ச்சியடைகின்றனர்.

1980 ஆம் ஆண்டிலிருந்தே உள்ளதாகக் கூறப்படும் இந்தப் பேசும் கிறிஸ்துமஸ் மரம் கடந்த 15 ஆண்டுகளாகக் கவனிப்பாரின்றிப் போனது. தற்போது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர் கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்கள்.