Tuesday, October 15, 2024
Home Tags Militaryo

Tag: militaryo

ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

0
ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு. இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன....

Recent News