நடிகர்களை தாக்கும் விநோத நோய்கள்! அடுத்து ஒரு நடிகரும் பாதிப்பு

211
Advertisement

அண்மையில் சமந்தா, மயோசிட்டிஸ் என்ற தசை வீக்கம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டதை பற்றி பதிவிட்ட பின்னரே பலருக்கும் அந்நோயை பற்றி தெரிய வந்தது.

அதே போல சல்மான் கானை பாதித்த Trigeminal Neuralgia என்ற நரம்பியல் நோய், அமிதாப் பச்சனுக்கு வந்த Myasthenia Gravis என்ற தசை செயலிழப்பு, ஹ்ரிதிக் ரோஷனின் மூளையில் இரண்டு மாதங்களாக இருந்த ரத்த கட்டி, லிசா ரேவுக்கு வந்த அரிய வகை வெள்ளை அணுக்கள் புற்றுநோய் என நடிகர்களால் மக்கள் தெரிந்து கொண்ட விநோத நோய்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் Vestibular Hypofunction என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Vestibular System என்பது உள்காதில் இருந்து கண்களுடனும் தசைகளுடனும் ஒருங்கிணைந்து உடலை balance செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்பு  Vestibular Hypofunction என அழைக்கப்படுகிறது. இந்த நோயினால் உடல் ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்டு மயக்கம் போன்ற உடல் உபாதைகளுடன் உளவியல் சிக்கல்களும் ஏற்படும் என கூறும் மருத்துவர்கள் இந்நோய்க்காக ப்ரத்யேக பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.