நாய்களை வரவேற்கும் நட்சத்திர ஹோட்டல்

191
Advertisement

”எங்கள் ஹோட்டலுக்குள் நாய்களை வரவேற்கிறோம்”
என்கிற வேடிக்கையான அறிவிப்பு சமூக வலைத்தளத்தில்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

வட அமெரிக்காவை மையமாகக்கொண்டு கடந்த 50
ஆண்டுகளுக்கும் மேலாக 89 ஆயிரத்துக்கும் அதிகமான
அறைகளுடன் கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில்
இயங்கி வருகிறது LA QUINTA inns and suits
என்கிற நட்சத்திர ஹோட்டல்.

இந்த ஹோட்டல் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில்,
”எங்கள் ஹோட்டலுக்கு நாய்களை வரவேற்கிறோம்.
படுக்கையில் படுத்துக்கொண்டே நாய்கள் சிகரெட் புகைக்கும் என்றோ,
அதன்காரணமாக போர்வைகள் எரிந்தன என்றோ
நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

எங்கள் ஹோட்டலின் டவல்களை நாய்கள் திருடிவிட்டன என்றோ,
தொலைக்காட்சியை சத்தமாக வைத்துக்கேட்டன என்றோ,
தங்களுடன் வந்துள்ளவர்களோடு சத்தமாக சண்டை போட்டன என்றோ
நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. நாய்கள் மது அருந்தின என்றோ,
பர்னிச்சர்களை உடைத்தன என்றோ என்றோ நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.

எனவே, இத்தகைய தப்புகளை நீங்கள் செய்யமாட்டீர்கள் என
உங்கள் செல்லப்பிராணி உறுதி அளித்தால், நீங்களும் எங்கள்
ஹோட்டலுக்கு வரலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, செல்லப் பிராணிகளை ஹோட்டல், லாட்ஜ் போன்றவற்றில்
அனுமதிப்பதில்லை. அதேசமயம், அவற்றை வளர்ப்போரால்
செல்லப்பிராணிகளைப் பிரிந்திருக்கவும் முடிவதில்லை.
இத்தகைய சூழலில், LA QUINTA நட்சத்திர ஹோட்டல் வெளியிட்டுள்ள
அறிவிப்பு ஹோட்டல்களில் தங்கும் வாடிக்கையாளர்களின்
மனோ பாவங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளது,

நாய்களின் நற்குணத்தை எடுத்துக்கூறுவதாகவும் மனிதர்களின்
குணங்களை இடித்துரைப்பதாகவும் அமைந்துள்ளது இந்த விநோதமான அறிவிப்பு.