ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.