திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் இலங்கை விமானங்கள்

281

கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலியாக இலங்கை விமானங்கள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பும் நிலை உருவாகி உள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ள நிலையில், அங்கு பெட்ரோல், டீசல் மட்டுமின்றி விமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொழும்புவில் இருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு இயக்கப்படும் விமானங்களால் அதிக வருவாய் ஈட்டப்படுவதால் இந்த விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் போதுமான எரிபொருள்கள் கிடைக்காததால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இலங்கை விமானங்கள் எரிபொருளை நிரப்பி செல்கின்றன.

இந்திய விமானங்களுக்கு வழங்கப்படும் விலையில் இலங்கை விமானங்களுக்கும் எரிபொருள் வழங்கப்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.