ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால்  பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு

222
Advertisement

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி மோசமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வண்டியில் எரிபொருள் இல்லாதால் 2 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹல்டமுல்லாவில், குழந்தைக்கு மஞ்சள் காமாலை அறிகுறிகள் தென்படுவதால், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெற்றோர்கள் விரும்பினர்.

தொடர்ந்து எரிபொருள் நெருக்கடியால், குழந்தையின் தந்தை பல மணி நேரம் பெட்ரோலைத் தேடிஅலைய வேண்டியதாயிற்று.இறுதியாக, குழந்தை ஹல்தமுல்ல மருத்துவமனைக்கு வந்தடைந்த போது, மருத்துவர்கள்  குழந்தையை மற்றொரு மருத்துவமனையின்  அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற பரிந்துரைத்தனர்.

ஆனால் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருத்துவமனையை  சென்றடைய தாமதமானதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தது.இதனை மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தன் சமூக வலைதளபக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.மேலும்  மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு உதவ அரசியல் அதிகாரிகள் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

ஒரு லிட்டர் பெட்ரோல் கிடைக்காததால் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற மனச்சோர்வு பெற்றோருக்கு நிரந்தரமாக இருக்கும் என்பது கசப்பான உண்மை.