மானாமதுரையும் மூடுபனியும்!

638
Advertisement

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காண்போரை கவர்ந்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு காணப்படுவது வழக்கம்.

ஆனால் மார்கழி மாதம் முடிந்தும் பனிப்பொழிவு தொடர்ந்தவாரேயுள்ளது.

மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பனி இயல்பை விட சற்று அதிகரித்து காணப்பட்டுள்ளது.

மானாமதுரையின் மதுரை பைபாஸ் ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்வதால் இயல்பு மாறியுள்ளது.

மானாமதுரையில் மட்டுமில்லாமல் இதேபோன்று திருப்புவனம், திருப்பாச்சேத்தி,முத்தனேந்தல், ராஜகம்பீரம் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களில் மேல்பரப்பில் பணிகள் விழுவதால் விவசாய பணிகளை பொறுத்தவரை தொய்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.