அமெரிக்காவில் பச்சையாக மாறிய வானம்

235
Advertisement

அமெரிக்காவில், அண்மையில் தாக்கிய புயலின் விளைவாக, தென் டகோட்டா பகுதியில் வானம் திடீரென பச்சை நிறத்தில் மாறியது.

மாலை வேலையில் காணப்படும் சூரியனின் சிகப்பு ஒளி புயலில் இருக்கும் ஐஸ் அல்லது தண்ணீர் துளிகளில் பிரதிபலிக்கும் போது, வானம் பச்சை நிறமாக தெரியும் என அமெரிக்காவை சேர்ந்த வானியல் நிபுணர் கோரி மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

மேலும், புயல் வலுவாக கூடும் என கூறிய கோரி, மேகங்களுக்குள் அதிக அளவு ஐஸ் இருக்கும் காரணத்தினால் தான் வானத்தில் நிற மாற்றம் நடந்துள்ளது எனவும், மழை பெய்ய துவங்கும் போது ஆலங்கட்டிகள் அதிக அளவில் பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் பகிர்ந்துள்ளார்.