“பாடகரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்”

282

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ்லா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆம் ஆத்மி அரசு நேற்றுமுன்தினம் தான் அவருக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றது.

அதற்கு மறுநாளே சித்து மூஸ்லா கொல்லப்பட்டது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கனடாவைச்சேர்ந்த கேங்ஸ்டர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்து உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படும் என்று டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.