எடியூரப்பா – சித்தராமையா சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

170

கர்நாடக அரசியலில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, சித்தராமையா ஆகியோர் முக்கிய தலைவர்களாக உள்ளனர்.

பா.ஜ.க-வில் எடியூரப்பாவும், காங்கிரசில் சித்தராமையாவும் என, இருவரும் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவரும் பெங்களூருவில் திடீரென சந்தித்து கொண்டனர்.

Advertisement

எதிர்பாரதவிதமாக இந்த சந்திப்பு பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றது.

அப்போது, அரசியலில் பரபரப்புகளுக்கு இடையே இருவரும், விமான நிலையத்தில் உள்ள விருந்தினர் அறையில் அமர்ந்து சிறிது நேரம் பேசினர்.

இந்த சந்திப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.