வலையில் மாட்டிய செந்தில்பாலாஜி.. இந்த “4 விஷயங்கள்” உங்களுக்கு தெரியுமா? இதான் நடைமுறையே.

297
Advertisement

ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி… விசாரணைக்காக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.

அடுத்த 10 நிமிடங்களில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படுகிறது. இதையடுத்து 2.30 மணியளவில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். உடனே மருத்துவர்கள் பரிசோதனை செய்து அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றனர்.

அதில், உயர் ரத்த அழுத்தம் 160 / 100ஆக உள்ளது. தீவிர நெஞ்சு வலி இருப்பதாக ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், எம்.பிக்கள், வழக்கறிஞர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.