2-வது திருமணம் செய்தவருக்கு ஓராண்டு சிறை

47

செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்.

இவருக்கும் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட விஞ்சியம்பாக்கம் பகுதியை் சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

Advertisement

இதனிடையே அன்பரசன் முள்ளிக்கொளத்தூர் பகுதியை சேர்ந்த புனிதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவர இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் செங்கல்பட்டு கூடுதல் மகிளா அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.