டைனோசர் தலை, பறவை உடல்…ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த விநோத உயிரினம்!

224
Advertisement

காலங்காலமாக மனிதனின் ஆர்வத்தை தூண்டிக் கொண்டே இருக்கும் டைனோசரை பற்றி புதிய சுவாரசியங்களும் வெளிவந்து கொண்டே தான் உள்ளது.

தற்போதும், Chinese Academy Of Sciencesஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பறவை உடல் மற்றும் டைனோசர் தலை கொண்ட விநோத உயிரினத்தின் தொல்பொருள் படிமத்தை கண்டெடுத்துள்ளனர்.

க்ரேடோநேவிஸ் சூய் (Cratonavis zhui) என பெயரிடப்பட்டுள்ள இந்த உயிரினம், அகலமான தோள்பட்டைகள் மற்றும் நீண்ட நகங்கள் கொண்ட ஒரு உயர் ரக கோழி போல இருந்தாலும், இதன் மண்டை ஓடு T Rex வகை டைனோசர்களோடு பெருமளவு ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விரிவான ஆராய்ச்சியில், 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த உயிரினம், பறவைகளை விட டைனோசர்களின் உடலமைப்போடு அதிகம் ஒத்துப்போவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த பறவை டைனோசரின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக இருக்கலாம் என கூறும் விஞ்ஞானிகள், இந்த ஆய்வின் தொடர்ச்சியாக அனைத்து உயிரினங்களுக்கும் பரிணாம வளர்ச்சி சாத்தியமா என்ற கோணத்தில் மேம்பட்ட ஆராய்ச்சி அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர்.