இப்படி ஒரு பிறப்பா? சவப்பெட்டியில் பிறப்பு!

180
Advertisement

ஆங்கிலத்தில் காபின் பர்த் (COFFIN BIRTH) என்றழைக்கப்படும் சவப்பெட்டி பிறப்பை , postmortem fetal extrusion என்றும் கூறுவார்களாம்.

இதில் இறந்த கர்ப்பிணி பெண்ணின் சிதைந்த உடலின் , உள் வயிற்றில் வாயுக்களின் அழுத்தம் அதிகரிப்பதால்,இறந்த பெண்ணின் உடலில் உள்ள வெஜினல் ஓப்பனிங் (VEGINAL OPENING) மூலம் அசைக்கமுடியாத கருவை வெளியேற்றுகிறதாம்,இந்த வகையான பிரேத பரிசோதனை பிரசவம் ,இறந்த பெண்ணின் சிதைந்த உடலில் அரிதாகவே  நடக்கிறதாம்.

பொதுவாக மனித உடலின் சிதைவின்போது,வயிற்றுக்குழியின் உறுப்புகள், அதாவது வயிறு மற்றும் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களினால் வாயுகள் உண்டாகிறது,அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் , சில சமயங்களில் வாயுக்களின் அதிகப்படியான அழுத்தம் கருப்பையை அழுத்தலாம் ,அது கீழ்நோக்கி அழுத்தப்பட்டால் ,மேலும் அது உள்ளே வெளியே திரும்பி , வெஜினல் ஓப்பனிங் மூலம் வெளியேற்றப்படலாம் என்று செய்திகளில் குறிப்பிட பட்டிருக்கிறது.

இது போன்ற சவப்பெட்டி பிறப்பு (காபின் பர்த்) அரிதாகவே நிகழ்கிறதாம்.