“திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்”

249

தமிழகத்தில் திட்டமிட்டபடி 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 13ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக மாணவர்கள் அல்லது பெற்றோர் புகார் அளித்தால் அந்த பள்ளியிடம் உரிய விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிவித்தார்.