ஒரே நாளில் 81 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா

341
Advertisement

சவுதி அரேபியாவில், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இதுதொடர்பாக அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல் கய்தா, ஐ.எஸ்., ஹவுதி கிளச்சியாளர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், சவுதி அரேபியாவில் தற்போது, கழுத்தை அறுத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு, மெக்கா மசூதியை கைப்பற்றிய போராட்டகாரர்கள் 63 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.