உக்ரைன் மாகாணங்களை, ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் கடந்த நிலையில், போர் காரணமாக உலக நாடுகள் பல, ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷ்யா வசமுள்ள உள்ள மாகாணங்களையும் சேர்த்து, மொத்த 5 மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கியது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்த வாக்கெடுப்பு நடப்பதால், முடிவுகள் ரஷ்யாவிற்கு சாதகமாகவே அமையும் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ஆம் தேதி வரை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.