Saturday, March 22, 2025

அட பாவமே..”ரெட் பவர் ரேஞ்சருக்கே இந்த நிலைமையா” !

90’ஸ் குழந்தைகளின் ஹீரோ நிகழ்ச்சிகளில் ஒன்று  “பவர் ரேஞ்சர்ஸ்”.பள்ளிசெல்லும் நேரம் தவிர,டிவில் மூழ்கி கிடந்தனர் 90’ஸ் கிட்ஸ். நண்பர்களுடன் கூட விளையாடம மறைந்த  நபர்களும் உண்டு.

இத பத்தி நீங்க 90’ஸ் கிட்ஸ்ட கேட்டு பாத்தா, “அது எல்லாம் ஒரு காலம்…” அப்படி இருந்தோம், இப்படி இருந்தோம்னு அவங்க ஸ்வாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துப்பாங்க.சரி “பவர் ரேஞ்சர்ஸ்” யாரை புடிக்குன்னு கேட்டா, எல்லாரும் சொல்ற பதில் “ரெட் பவர் ரேஞ்சர்”

பவர் ரேஞ்சரின் சிசிய பிள்ளைமாதி பல சேட்டைகளை செய்தவர்கள் தான் 90’ஸ் கிட்ஸ்.இந்நிலைல,ரெட் பவர் ரேஞ்சரை,காசோலை மோசடி வழக்கில் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சில்  “மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ்” என்ற தொடரும் ஒன்று,1993-ல் ஒளிபரப்பட்ட இந்தத்தொடரில் ரெட் பவர் ரேஞ்சராக அறிமுகம் ஆனவர் தான்,செயின்ட் ஜான்.இதில் ஜேசன் லீ ஸ்காட் என்ற பெயரில் ரெட் பவர் ரேஞ்சர்  கதாபாத்திரத்தில்  படித்திருப்பார்.

முதல் சீசன் மட்டுமே இவர் நடித்தார்.இந்நிலையில் செயின்ட் ஜான்,காசோலை பாதுகாப்பு திட்டத்தில் மோசடி செய்ததாக அந்நாட்டு காவல்துறை அவரை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் இவருடன் சேர்த்து 18 பேரை கைது செய்தனர் காவல்துறை.ரெட் பவர் ரேஞ்சருக்கே இந்த நிலைமையா  என்பது போல அவரின் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

Latest news