ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்

212

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகைக்குப் பதிலாக கண் கருவிழி பதிவை அமலாக்குவதற்கான திட்டம் விரைவில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தற்போது கைவிரல் ரேகை பதிவுமுறை அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இது நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்தும் ரேஷன் ஊழியர்கள் தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன.

இதனையடுத்து இந்தியாவின் வேறுபல மாநிலங்களில் உள்ளதைப்போல, தமிழகத்திலும் கண் கருவிழிப் பதிவு மூலமாக பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் கண்விழி பதிவுமுறை சோதனை முறையில் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் கண்விழி பதிவு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியிருக்கிறார்.