மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : இருவர் கைது

419

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் இருந்து கடற் பாசி எடுக்க சென்ற பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார்.

குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இறால் பண்ணையும் மூடப்பட்டது. 

இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இறால் பண்ணையில் பணிபுரியும் ஆறு வடமாநில இளைஞர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகிய இருவரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை  ராமேஸ்வரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் இன்று காலை இராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு பகுதியில் மீனவ பெண் கொலை செய்யப்பட்டு உடல் கிடந்த இடத்திற்கு அழைத்து அழைத்து வந்த இராமேஸ்வரம் போலீசார் அவர்கள் எவ்வாறு இந்த குற்றத்தில் ஈடுபட்டார்கள் என செய்து காட்டியதுடன், இறால் பண்iயில் புதைத்த வைத்த  மீனவ பெண்ணிடம் இருந்து எடுத்த தங்க ஆபரணத்தை கைபற்றி போலீசார்  மீண்டும் அவர்களை  மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று மாலை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட மேலும் 4 வட மாநில இளைஞர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.