வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

203

தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களான தி.மு.க-வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ் பாரதி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், அ.தி.மு.க-வை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் முடிகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சார அடிப்படையில் திமுக-விற்கு 4 இடங்களும், அதிமுக-விற்கு 2 இடங்களும் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

திமுக வேட்பாளர்கள் கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது.

ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.