மாநிலங்களவை தேர்தல் – தமிழகத்தில் 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

229

மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் கடந்த 25ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலாளருமான சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தர்மரும், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் 7 சுயேட்சை வேட்பாளர்களுக்கும் மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் நேற்று மாலை 3மணியுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

7 சுயேட்சை வேட்பாளர்களின்  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 6 பதவிக்கு, கட்சிகள் சார்பில் 6 பேர் மட்டுமே களத்தில் இருப்பதால், அந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.