தலைமைச் செயலகத்தில் ரெய்டு..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..

191
Advertisement

தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிலும் தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் 5 பேர் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.


காலையில் வாக்கிங் சென்ற அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தார். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும், சோதனை நிறைவு பெற்றவுடன் பேசுகிறேன் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.