தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி

38

நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.

அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இதனையடுத்து,காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக சென்றார்.

அமலாக்கத்துறை அலுவலக வளாகத்தில் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.

அக்பர் சாலையில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

முன்னதாக, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார்.