முன்விரோதம் – 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்

372

பஞ்சாப்பில் முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

EWS காலனியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களும்  முன் விரோதம் காரணமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு தப்பி ஓடிய நிலையில், அவனை துரத்தி சென்ற அந்த கும்பல் அந்த சிறுவனை சரமாரிய அடித்து தாக்கியது.

மேலும், மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களையும், உபகரணங்களையும் அடீத்து நொறுக்கினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நட்த்தி வருகின்றனர்.